என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா மட்டும் ஆட்டமிழ்க்காமல் 29 ரன்கள் அடித்து தனி ஒருவராக போராடி வருகிறார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்தது.
- இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக 8 அணிகள் பங்கேற்கும் புதிய தொடரை ஐசிசி அறிமுகம் செய்தது.
மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்தது. இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது.
இந்த தொடரில் தாய்லாந்து, நெதர்லாந்து, PNG, ஐக்கிய அரபு, ஸ்காட்லாந்து, நமிபியா, தன்சானியா, உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தார்.
- பாபர் அசாம் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்துள்ளார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஜெய்ந்த் லியானகே 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கமிந்து மெண்டீஸ் 44 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் ஆசம் சதம் அடித்தார். அவர் 102 ரன்னும் (8 பவுண்டரி), பகார் ஜமான் 78 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தன் மூலம் 807 நாட்கள் மற்றும் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார். இதே போல இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல போட்டிகளில் தடுமாறினார். அதன்பிறகு 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்தார். அதேபோல பாபர் அசாமும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தா டெஸ்டில் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்.
- காயம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால், 2ஆவது டெஸ்டில் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் முதல் பயிற்சி செசனை தொடங்கினர். அப்போது ரபாடாவிற்கு இடுப்பு பகுதியில் (விலா எலும்பு) காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன், இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
ரபாடா காயம் குறித்து தென்ஆப்பிரிக்கா அணி மீடியா மானேஜர் கூறுகையில் "கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி செசன்போது ரபாடா காயம் அடைந்தார். அவருக்கு புதன்கிழமை காலை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பிட்னஸ் டெஸ்டும் செய்யப்பட்டது. அவர் வலி இருப்பதாக உணர்ந்தார். இறுதியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்னும் மருத்துவக் குழுவுடன் கூடுதல் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு வருகிறார்" என்றார்.
ரபாடா இடம் பெறாததால், கார்பின் போஸ்ச் அணியில் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
- இந்த தொடர் வருகிற 21-ந் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளார். அவரின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் பேட்டர்களை மிரட்டும் வல்லமை கொண்ட அவர் இல்லாமல் இருப்பது இங்கிலாந்து அணி பேட்டர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 132 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னும், கே.எல்.ராகுல் 39ரன்னும், ரிஷப்பண்ட் 27 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் இருந்தபோது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-துருவ் ஜூரல் ஜோடி ஆடி வருகிறது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜாவும், ஜூரலும் தொடர்ந்து ஆடினார்கள்.
ஜூரல் 14 ரன்னிலும் ஜடேஜா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்தீப் 1, சிராஜ் 1, பும்ரா 1, அக்ஷர் படேல் 16 என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
- சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர்.
- மேலும் பல வீரர்களை விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது.
இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல சி.எஸ்.கே. அணியில் இருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர். இதற்கு இரு அணி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்று காலை வெளியானது.
10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் பங்குபெற உள்ளனர்.
மேலும் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரையும் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பத்திரனாவை விடுவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மினி ஏலத்தில் மிகவும் மலிவான விலையில் திரும்பப் பெற அவர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் பேட்டிங் செய்த சுப்மன் கில் 3 பந்துகளில் காயம் காரணமாக வெளியேறினார்.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 29 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் 39 ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தர். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை சந்தித்த நிலையில் கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி வெளியேறினார்.
நவம்பர் மாதத்தில் இதே (15-ந் தேதி) தேதியில் கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் எடுத்து retired hurt ஆனார்.
அதேபோல 2 ஆண்டு கழித்து அதே நாளான நவம்பர் 15-ந் தேதி இன்றும் அவர் retired hurt ஆகி வெளியேறி உள்ளார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
- மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
- சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. இந்த நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. இதனை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது அதன்படி 'பிகில்' படத்தில் விஜய்யின் இன்ட்ரோ ஸ்டைலில் ஜடேஜா அந்த வீடியோவில் வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
- ரிஷப் பண்ட் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது.
முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னிலும் கேஎல் ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதில் ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இரண்டு சிக்சர்கள் விளாசியதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் சேவாக்கின் (90) சாதனையை ரிஷ்ப பண்ட் (91) முறியடித்துள்ளார்.
இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:-
1. ரிஷப் பந்த் (91 சிக்சர்)
2. வீரேந்திர சேவாக் (90 சிக்சர்)
3. ரோஹித் சர்மா (88 சிக்சர்)
4. ரவீந்திர ஜடேஜா (80 சிக்சர்)
5. எம்.எஸ். தோனி (78 சிக்சர்)
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது.
- வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். 26.1 ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.
29 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 3 பந்தை ஸ்விப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். அப்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. அணி மருத்துவர் வந்து சோதனை செய்த போதும் அவரால் வலி தாங்க முடியவில்லை. இதனால் அவர் retd hurt ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
- நிதிஷ் ராணா கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார்.
- அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த சீசன் மும்பை அணிக்காக விளையாடினார்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி கொல்கத்தா அணியில் இருந்து நிதிஷ் ராணா டெல்லி அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே இணைந்துள்ளார்.






