என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்கள் சேர்த்தது.
    • இந்தியா 93 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    30 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 29 ரன்களுடனும், போஸ்ச் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது.

    பவுமா- போஸ்ச் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. போஸ்ச் 25 ரன்கள் அடித்தார். பவுமா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஒட்டுமொத்தமாக இந்தியாவைவிட 123 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். ஜுரல் 13 ரன்னிலும், பண்ட் 2 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் குல்தீப் யாதவ் 1 ரன்னிலும், சிராஜ் ரன்ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 2ஆவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2ஆவது இன்னிங்சில் ஹார்மர் 4 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சுப்மன் கில் 2ஆவது இன்னிங்சில் களம் இறங்கவில்லை.

    • சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் நேற்று வெளியிட்டது.

    சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.

    இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஆண்ட்ரே ரசலை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கேகேஆர் இருக்கும்.. எனக்கு தெரிந்து கேமரூன் கிரீன் சிஎஸ்கேவை விட கேகேஆர் அணிக்கு தான் தேவையான வீரராக இருப்பார். அதனால் கிரீனின் விலையை சிஎஸ்கே அணி ஏற்றிவிடவேண்டும், அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழுவீச்சில் செல்லமுடியும்.. சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸால் பவுலிங் மற்றும் சிறந்த ஃபினிசிங் போன்றவற்றிற்கு ரஸ்ஸல் சிறந்த தேர்வாக இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 2 ஆவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ், முகத்து சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    124 ரன்கள் என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

    • முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
    • சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் 2 ஆவது இன்னிங்சில் சுப்மன் கில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், கழுத்து வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் இனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
    • இந்தியாவுக்கு 100-க்கும் அதிகமான இலக்கு கடினமான இருக்க வாய்ப்புள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் பந்து நன்றாக திரும்பியது. இதனால் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 4 விக்கெட் வீழ்த்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 93 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஏழு விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். ஜடேஜா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    தற்போது வரை தென்ஆப்பிரிக்கா 60 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய ஹார்மர், இந்தியாவை வீழ்த்த வழியை கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹார்மர் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டு தொடரின்போது விக்கெட்டுகள் மோசமாக இருந்திருக்கலாம். மொஹாலியின் ஆடுகளத்தை பற்றி நான் யோசித்து பார்த்தால், முதல் நாளிலேயே அது சிதைந்து போனது. நாக்பூர் ஆடுகளமும் அப்படியே இருந்தது. ஆடுகளத்திலிருந்து பள்ளங்கள் போல் குழி உருவானதை நான் நினைவில் கொள்கிறேன்.

    ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான ஆடுகளம் விளையாடக்கூட வகையில்தான் உள்ளது. பந்து திரும்புகிறது. ஆனால் எல்லா பந்துகளும் திரும்புவதில்லை. இந்தியா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தில் விளையாட விரும்புவார்கள். ஆகவே, நாங்கள் அவர்களை அவர்களுடைய சொந்த இடத்தில் வீழ்த்துவதற்கான வழிகளை பெற வேண்டும்.

    தற்போதைய நிலை குறித்து விரக்தி அடைவதாக நான் சொல்ல மாட்டேன். இந்த போட்டியில் இன்னும் நிறைய விளையாட வேண்டியுள்ளது. நாங்கள் முயற்சி மேற்கொண்டு, சவால் கொடுப்பதற்கான ஸ்கோரை எட்ட முடியும் என இன்னும் நம்புகிறேன்.

    இவ்வாறு ஹார்மர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது. 

    • மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும் வைத்துள்ளன.
    • குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.

    அந்த வகையில் 10 அணிகளும் ரிலீஸ் செய்த வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டி காக், மொயீன் அலி, அன்ரிச் நோர்ஜே, வெங்கடேஷ் அய்யர் (23.75 கோடி ரூபாய்), அந்த்ரே ரஸல் (12 கோடி ரூபாய்) ஆகியோரை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் கொல்கத்தா கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும்.

    மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25.50 கோடி ரூபாயும், குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 21.80 கோடி ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் 11.50 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு மன்மதனே வாராய்' பாடலுடன் சஞ்சு சாம்சனின் வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடியை ரிலீஸ் செய்துள்ளது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா ரிலீஸ் செய்துள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.

    அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடி, டிம் ஷெய்பெர்ட், மயங்க் அகர்வால், ஸ்வாஸ்டிக் சிகாரா ஆகியோரை விடுவித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குர்னால் சிங் ரதோர், தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, பரூக்கி, ஆகாஷ் அத்வால், ஆஷோக் சர்மா, குமார் கார்த்திக்கேயா, சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா ஆகியோரை விடுவித்துள்ளது.

    டேல்லி கேப்பிட்டல்ஸ் "ஜேக் பிராசர்-மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரேரியா, செதிகுல்லா அடல், மன்வான்த் குமார், தர்ஷன் நல்கண்டே ஆகியோரை வெளியேற்றியுள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா, ராகுல் சாகர் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.

    • அந்த்ரே ரஸல், வெங்கடேஷ் அய்யரை விடுவித்துள்ளது.
    • கைவசம் 64.3 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 வீரர்களை வெளியிட்டுள்ளது.

    கொல்கத்தா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அந்த்ரே ரஸலை விடுவித்துள்ளது. அதேபோல் அதிக தொகைக்கு வாங்கிய வெங்கடேஷ் அய்யரையும் விடுவித்துள்ளது.

    அத்துடன் லவ்னித் சிசோடியா, டி காக், அன்ரிச் நோர்ட்ஜே, ரஹ்மதுல்லா குர்பாஸ், மொயீன் அலி, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சக்காரியா ஆகியோரை நீக்கியுள்ளது. தற்போது தன்வசம் 64.3 கோடி ரூபாயை வைத்துள்ளது. இந்த தொகையுடன் மினி ஏலத்தில் செல்ல இருக்கிறது.

    • பதிரனா, கான்வே உள்ளிட்டோரை அணியில் இருந்து விடுவித்துள்ளது.
    • ஜடேஜா Trade மூலம் ராஜஸ்தான் அணிக்கு செல்கிறார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே. 11 வீரர்களை விடுவித்துள்ளது.

    ஜடேஜாவை Trade மூலம் விடுவித்துள்ளது. அவருடன் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, பதிரனா, சாம் கர்ரன் (Trade- ராஜஸ்தான்). அந்த்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர் ஆகியோரை விடுவித்துள்ளது.

    ×