என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கான வழியை தேடவேண்டும்: ஹார்மர் சொல்கிறார்
    X

    இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கான வழியை தேடவேண்டும்: ஹார்மர் சொல்கிறார்

    • கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
    • இந்தியாவுக்கு 100-க்கும் அதிகமான இலக்கு கடினமான இருக்க வாய்ப்புள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் பந்து நன்றாக திரும்பியது. இதனால் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 4 விக்கெட் வீழ்த்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 93 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஏழு விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். ஜடேஜா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    தற்போது வரை தென்ஆப்பிரிக்கா 60 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய ஹார்மர், இந்தியாவை வீழ்த்த வழியை கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹார்மர் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டு தொடரின்போது விக்கெட்டுகள் மோசமாக இருந்திருக்கலாம். மொஹாலியின் ஆடுகளத்தை பற்றி நான் யோசித்து பார்த்தால், முதல் நாளிலேயே அது சிதைந்து போனது. நாக்பூர் ஆடுகளமும் அப்படியே இருந்தது. ஆடுகளத்திலிருந்து பள்ளங்கள் போல் குழி உருவானதை நான் நினைவில் கொள்கிறேன்.

    ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான ஆடுகளம் விளையாடக்கூட வகையில்தான் உள்ளது. பந்து திரும்புகிறது. ஆனால் எல்லா பந்துகளும் திரும்புவதில்லை. இந்தியா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தில் விளையாட விரும்புவார்கள். ஆகவே, நாங்கள் அவர்களை அவர்களுடைய சொந்த இடத்தில் வீழ்த்துவதற்கான வழிகளை பெற வேண்டும்.

    தற்போதைய நிலை குறித்து விரக்தி அடைவதாக நான் சொல்ல மாட்டேன். இந்த போட்டியில் இன்னும் நிறைய விளையாட வேண்டியுள்ளது. நாங்கள் முயற்சி மேற்கொண்டு, சவால் கொடுப்பதற்கான ஸ்கோரை எட்ட முடியும் என இன்னும் நம்புகிறேன்.

    இவ்வாறு ஹார்மர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×