என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மினி ஏலத்தில் மல்லுக்கட்ட இருக்கும் சிஎஸ்கே- கொல்கத்தா: கையில் இருக்கும் தொகை எவ்வளவு?
- மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும் வைத்துள்ளன.
- குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும் வைத்துள்ளன.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.
அந்த வகையில் 10 அணிகளும் ரிலீஸ் செய்த வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.
அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டி காக், மொயீன் அலி, அன்ரிச் நோர்ஜே, வெங்கடேஷ் அய்யர் (23.75 கோடி ரூபாய்), அந்த்ரே ரஸல் (12 கோடி ரூபாய்) ஆகியோரை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் கொல்கத்தா கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.
இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும்.
மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25.50 கோடி ரூபாயும், குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 21.80 கோடி ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் 11.50 கோடி ரூபாயும் வைத்துள்ளன.






