என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா தொடர்"

    • முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
    • சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் 2 ஆவது இன்னிங்சில் சுப்மன் கில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், கழுத்து வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் இனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும்.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 10-ந் தேதி டர்பனில் நடக்கிறது.

    ஒருநாள் போட்டி 17-ந் தேதியும், டெஸ்ட் தொடர் 26-ந் தேதியும் தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸ் கூறியதாவது:-

    இந்திய அணி ஒரு நல்ல அணி. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானது. முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். 

    ஒரு அணி மற்றொன்றை விட சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும். திறமையான வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களை பெற்று தங்களை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக விளையாட முடியும்.

    மூத்த வீரர்கள், ஆட்ட நுணுக்கங்களை பெற்று இருப்பார்கள். அதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் விளையாடாவிட்டாலும், அவர்கள் மூத்த வீரர்களுடன் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் பணியாகும்.

    அறிமுகமில்லாத இடங்களுக்கு விளையாட செல்லும்போது இளம் வீரர்கள், மூத்த வீரர்களிடையே இருந்து அவர்களின் அனுபவங்களை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×