என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2ஆவது டெஸ்டில் ரபாடா விளையாடுவாரா?
- கொல்கத்தா டெஸ்டில் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்.
- காயம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால், 2ஆவது டெஸ்டில் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் முதல் பயிற்சி செசனை தொடங்கினர். அப்போது ரபாடாவிற்கு இடுப்பு பகுதியில் (விலா எலும்பு) காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன், இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
ரபாடா காயம் குறித்து தென்ஆப்பிரிக்கா அணி மீடியா மானேஜர் கூறுகையில் "கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி செசன்போது ரபாடா காயம் அடைந்தார். அவருக்கு புதன்கிழமை காலை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பிட்னஸ் டெஸ்டும் செய்யப்பட்டது. அவர் வலி இருப்பதாக உணர்ந்தார். இறுதியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்னும் மருத்துவக் குழுவுடன் கூடுதல் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு வருகிறார்" என்றார்.
ரபாடா இடம் பெறாததால், கார்பின் போஸ்ச் அணியில் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது.






