என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் 2026: அணி மாறிய அர்ஜூன் டெண்டுல்கர்- நிதிஷ் ராணா
    X

    ஐபிஎல் 2026: அணி மாறிய அர்ஜூன் டெண்டுல்கர்- நிதிஷ் ராணா

    • நிதிஷ் ராணா கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார்.
    • அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த சீசன் மும்பை அணிக்காக விளையாடினார்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி கொல்கத்தா அணியில் இருந்து நிதிஷ் ராணா டெல்லி அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே இணைந்துள்ளார்.

    Next Story
    ×