search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Rana"

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.
    • கொல்கத்தா அணியுடன் நேற்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் நிதிஷ் ராணா. இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்சிபி, டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.

    அவர் காயம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் காயம் குணமடைந்து இன்று அணியுடன் இணைந்துள்ளார். இது அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கெதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வருகிற 14-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி மெதுவாக பந்துவீசியதாக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.

    இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.

    ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.

    இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.

    • முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
    • கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 180 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 11-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிப்பதுடன் முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. பஞ்சாப் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    இந்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    • கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
    • மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா 3-வது தோல்வயை தழுவியது.

    இந்தப் போட்டியின் போது கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ்ரானாவுக்கும், மும்பை சுழற்பந்து வீரர் ஹிர்திக் ஷோகீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் ரானாவை சமாதானப்படுத்துகிறார்கள்.

    இதுகுறித்து போட்டி நடுவர் விசாரணை மேற்கொண்டனர். இருவரும் வீரர்களின் நடத்தை விதியை மீறியது கண்டறியப்பட்டது. இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    • ஆந்த்ரே ரஸ்சல் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
    • ரிங்கு சிங்கால் ஒரு போட்டியில் வெற்றி பெற்று கொடுக்க முடியும்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 23 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோற்றது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது.

    தொடக்க வீரரான இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி புரூக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் சதத்தை பதிவு செய்த பெருமையை அவர் பெற்றார். கேப்டன் மார்க்ராம் 26 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ஆந்த்ரே ரஸ்சல் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்தது. இதனால் 23 ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

    கேப்டன் நிதிஷ்ராணா 41 பந்தில் 75 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), ரிங்கு சிங் 31 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த என். ஜெகதீசன் 21 பந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மார்கோ ஜான்சென், மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் டி. நடராஜன், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா கூறியதாவது:-

    பந்து வீச்சின் போது நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் 230 ரன் இலக்கை நோக்கி அடைவது என்பது மிகவும் கடினமானதே. நாங்கள் திட்டமிட்டு பந்து வீசி இருக்க வேண்டும். ரிங்கு சிங்கால் ஒரு போட்டியில் வெற்றி பெற்று கொடுக்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அதுமாதிரி நடக்காது என்பது எங்களுக்கு தெரியும்.

    ஆனால் அவர் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் பேட்டி செய்த விதம் மகிழ்ச்சியை அளித்தது. இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் மிக சிறப்பாகவே செயல்பட்டோம்.

    ஐதராபாத் அணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் எங்கள் வெற்றியை எளிதாக்கி இருக்கும். ஆனால் நாங்கள் கூடுதலாக 30 ரன்கள் கொடுத்து விட்டோம். எங்களது முக்கியமான பந்து வீச்சாளர்கள் கூட அதிகமான ரன்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

    அதற்காக அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் மற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இது ஒரு மோசமான நாள். தவறுகளை சரி செய்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா அணி 5-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை நாளை சந்திக்கிறது. ஐதராபாத் அணி 2-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி அடுத்தப் போட்டியில் மும்பையை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.

    • கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
    • காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் வரும் 31-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயெ நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

    இதுவரையில் கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதன் பிறகு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக அவர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்குப்பதிலாக நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் ராணா மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரசல் மற்றும் நிதிஷ் ரானாவுக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2019 #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.

    உத்தப்பா 50 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ரானா 34 பந்தில் 63 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்) ஆந்த்ரே ரசல் 17 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். முகமது ‌சமி, வருண் சக்கரவர்த்தி, விஜோயன், ஆந்த்ரே டை ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    டேவிட் மில்லர் 40 பந்தில் 59 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), அகர்வால் 34 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) மன்தீப்சிங் 15 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரசல் 2 விக்கெட்டும், பெர்குசன், பியூல் சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    கொல்கத்தா அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது.

    இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்தப் போட்டியின் தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரானாவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல உத்தப்பாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இறுதியில் ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயத்தில் இருந்து குணமடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்.

    தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    நோபாலால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிறிய தவறுகள் ஆட்டத்தை மாற்றி விடும். 219 ரன் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி ஏற்பட்டது. பேட்டிங்தான் ஆட்டத்துக்கு மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா நைட் டைரடர்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 30-ந்தேதி எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணி அதே தினத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. #IPL2019
    ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகியுள்ளார். ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணா 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ×