என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நோட்புக் கொண்டாட்டத்தால் களேபரம்: நிதிஷ் ராணா- திக்வேஷ் ரதி கடும் மோதல்- பிரித்து விட்ட பெண் அம்பயர்..!
- திக்வேஷ் ரதி பந்தில் ராணா சிக்ஸ் விளாசினார்.
- நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணா, ரதியை வெறுப்பேற்றியதால் மோதல்.
டெல்லி டி20 லீக்கின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தெற்கு டெல்லி- மேற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. மேற்கு டெல்லி கேப்டன் நிதிஷ் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதிஷ் ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திக்வேஷ் ரதி பந்து வீச வந்தார். பந்து வீசும்போது பந்தை ரிலீஸ் செய்யவில்லை. மீண்டும் பந்து வீச வரும்போது, நிதிஷ் ராணா தயாராகவில்லை. அங்கேயே மோதல் தொற்றிக் கொண்டது.
அதன்பின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் விளாசினார். அத்துடன் திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்தினால் பயன்படுத்தும் Notebook கொண்டாட்டத்தை நிதிஷ் ராணா பேட்டில் கையெழுத்து போடுவது போன்று செய்து காண்பித்தார். இதனால் திக்வேஷ் ரதி, நிதிஷ் ராணாவை நோக்கி ஏதோ கூறினார்.
இதனால் ராணா கோபம் அடைந்து திக்வேஷ் ரதி நோக்கி சென்றார். வாய் தகராறு கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் பெண் நடுவர் குறுக்கே வந்து இருவரையும் பிரித்து விட்டார். சக வீரர்களும் மோதலை பிரித்து விட்டனர். இதனால் இருவரும் பிரிந்து சென்றனர்.
மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட திக்வேஷ் ரதிக்கு 80 சதவீதம் அபராதமும், நிதிஷ் ராணாவுக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் ஆட்டமிழக்கும்போது, அவரை ஆட்டமிழக்கச் செய்த பாரதி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடவர் தலையீடு செய்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.






