search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hrithik Shokeen"

    • கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
    • மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா 3-வது தோல்வயை தழுவியது.

    இந்தப் போட்டியின் போது கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ்ரானாவுக்கும், மும்பை சுழற்பந்து வீரர் ஹிர்திக் ஷோகீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் ரானாவை சமாதானப்படுத்துகிறார்கள்.

    இதுகுறித்து போட்டி நடுவர் விசாரணை மேற்கொண்டனர். இருவரும் வீரர்களின் நடத்தை விதியை மீறியது கண்டறியப்பட்டது. இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    ×