என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு
- கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது.
- 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






