search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மைக்கேல் வாகன் - ஜோ ரூட்
    X
    மைக்கேல் வாகன் - ஜோ ரூட்

    இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக வேண்டும் - மைக்கேல் வாகன்

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்ததையடுத்து ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    ஜோரூ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் நீடிக்க கூடாது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வாரம் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டால் நேர்மையான முறையில் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறுவேன். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினால் இங்கிலாந்து அணி மோசனமான நிலைக்கு தள்ளப்படும் என நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து அணி அதிக ரன்களை குவிக்கும் ஒரு மூத்த வீரரை பெறும். மேலும் அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு முன் உதாரணமாக திகழ்வார் என மைக்கேல் வாகன் கூறினார்.

    ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27-ல் வெற்றியும் 26 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. வெற்றியின் சராசரி 42.18 ஆகும்.

    Next Story
    ×