search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோ ரூட்"

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
    • 4-வது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார்.

    இந்திய அணிக்கு எதிராக அதிக விளாசி வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), வில் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளார்.

    • இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6-வது விக்கெட்டுக்கு ரூட்- போக்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை படைக்கவிட்டார்.

    இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • 17-வது ஐ.பி.எல். தொடர் 2024, மார்ச் 23-ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இன்றுக்குள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் டிரேடிங் முறையில் வீரர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி), ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி) லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சபாஷ் அகமது ரூ.2.4 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

    முன்னாள் கேப்டனான அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
    • டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

    இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

    • 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
    • இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே ரூட் முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 524 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

    ஜேக் கிராவ்லி 56 (45) ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 (178) ரன்களை விளாசினார். ஓலி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 (208) ரன்கள் விளாசினார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள்

    அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின் தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 எடுத்திருந்தது.

    இப்போட்டியில் 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.

    அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2-வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியலில் அலஸ்டர் குக் முதல் இடத்திலும் (31 வருடம் 357 நாட்கள்), ஜோ ரூட் 2-வது இடத்திலும் (32 வருடம் 154 நாட்கள்), 3, 4, 5 இடங்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் (34 வருடம் 95 நாட்கள்), ரிக்கி பாண்டிங் (34 வருடம் 210 நாட்கள்), ஜேக் காலிஸ் (34 வருடம் 245 நாட்கள்) உள்ளனர்.

    இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே முறியடித்துள்ளார். அவருக்கு தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணி வீரரான போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 892 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கினார்.

    டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அப்ரிடி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 இடம் பின் தங்கி 6-வது இடத்தில் உள்ளார். அந்த அணியின் மற்றொரு வீரரான டிரெண்ட் போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணி வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் தொடர்கிறார்கள்.

    இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து

    67 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக திகழும் ஜோ ரூட், கெய்ல் போன்று சிக்ஸர்கள் விளாச முடியாது என்று தெரிவித்துள்ளார். #JoeRoot
    இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 350-க்கு மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்யும்போது சதம் அடித்து அசத்தினார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட், டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் விளையாடியது கிடையாது. ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சில போட்டிகளில் விளையாடினார்.

    இந்நிலையில் கிறிஸ் கெய்ல் போன்று என்னால் சிக்ஸர்கள் விளாச முடியாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. டி20 போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கும்போது, அந்த வாய்ப்பை தவறவிட விரும்ப மாட்டேன்.

    கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசுவதுபோல் என்னால் அடிக்க இயலாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும். அவரைப்போல் கேலரிகளுக்கு பந்தை அனுப்ப இயலாது. ஆனால், 95 மைல் வேகத்தில் வரும் பந்தை டாப் எட்ஜ் மூலம் சிக்சருக்கு விளாச முடியும்’’  என்றார்.
    ×