என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
- இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 111 ரன்கள் எடுத்தார்.
- ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
கொழும்பு:
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 111 ரன்களுடனும் கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் தொடர்நாயகன் விருது வென்றார்.
முன்னதாக ஜோ ரூட் 60 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டி சேர்த்து) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் லாராவை (22,358 ரன்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கினார். ஜோ ரூட் 22,413 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.






