என் மலர்

  விளையாட்டு

  விராட் கோலி
  X
  விராட் கோலி

  100-வது டெஸ்ட் போட்டி: விராட் கோலிக்கு தெண்டுல்கர், கங்குலி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விராட் கோலி என்னுடன் இருந்த சமயங்களில் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததையும், ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியதையும் அறிவேன் என சச்சின் தெரிவித்தார்.
  100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு மைல்கல். நாட்டுக்காக ஒரு வீரர் விளையாடத் தொடங்கும் போது 100 டெஸ்ட் என்பது ஒரு கனவாக இருக்கும். ஏனெனில் 100 டெஸ்டில் ஆடுவது எளிதான விஷயம் அல்ல. கோலிக்கு இது ஒரு மகத்தான தருணம். இன்னும் அவர் நிறைய சாதனைகள் படைப்பார் என்று நம்புகிறேன்’ என்று கங்குலி குறிப்பிட்டார்.

  விராட் கோலி - கங்குலி - சச்சின்

  தெண்டுல்கர் கூறுகையில், ‘என்ன ஒரு அற்புதமான சாதனை. 2007-08-ம் ஆண்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது விராட் கோலி பற்றி முதல்முறையாக கேள்விப்பட்டேன். அப்போது மலேசியாவில் நடந்து கொண்டிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதில் ஒரு வீரர் நன்றாக ஆடுவதாக என்னிடம் கூறினர். அது தான் கோலி. பின்னாளில் நானும், அவரும் இணைந்து இந்திய அணிக்காக விளையாடினோம். எங்களது பயணம் நீண்ட காலம் இல்லை என்றாலும் என்னுடன் இருந்த சமயங்களில் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததையும், ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியதையும் அறிவேன். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பே அவரது உண்மையான வெற்றி’ என்றார்.
  Next Story
  ×