search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் டெண்டுல்கர் - பென் ஸ்டோக்ஸ்
    X
    சச்சின் டெண்டுல்கர் - பென் ஸ்டோக்ஸ்

    ஐசிசியின் ட்விட்... மீண்டும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள் அதிருப்தி...

    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு ஐசிசி மீண்டும் சச்சின் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் நடைப்பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 358 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 75 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்து. கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் 73 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்தின் இலக்கு குறைந்து கொண்டே வந்தது.

    ஐசிசி

    சதம் அடித்தாலும் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தாமல் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நினைப்பில் விளையாடினார். இறுதியில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    பென் ஸ்டோக்ஸ் 219 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 135 ரன்கள் குவித்தார். இதையடுத்து பென் ஸ்டோக்ஸை பல தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வந்தனர்.

    இந்நிலையில் ஐசிசி உலக கோப்பையின்போது ஸ்டோக்ஸை சச்சின் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு ‘எப்போதும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சச்சின் டெண்டுல்கர்’ என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டது. இது சச்சின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டு, ‘ஏற்கனவே உங்களுக்கு சொன்னதை போல’ என கேப்ஷன் போட்டு மீண்டும் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இதற்கு சச்சின் ரசிகர்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
     



     
    Next Story
    ×