search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர்
    X
    கவாஸ்கர்

    தேர்வுக்குழு ஒரு ‘நொண்டி வாத்து’: கவாஸ்கர் இப்படி சாடுவதற்கு காரணம் என்ன?

    எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு ‘நொண்டி வாத்து’ என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
    எம்எஸ்கே பிரசாத் தலைவமையிலான சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜத்தின் பிரன்ஜாப் தேர்வுக்குழு இந்திய அணியை தேர்வு செய்து வந்தது.

    உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அப்போது வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ள கேப்டன் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டார்.

    உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த கேஜர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விராட் கோலி கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி தேர்வுக்காக கூட்டம் கூட்டப்படாததால், தேர்வுக்குழுவை ‘நொண்டி வாத்து’ என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.

    எம்எஸ்கே பிரசாத்

    இதுகுறித்து கவாஸ்கர் ஒரு பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் ‘‘நொண்டி வாத்து பற்றி பேசினால், அது இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு கச்சிதமாக பொருந்தும். மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இருக்க வேண்டும் என்பதை அவரது பார்வையில் இருந்து வெளிப்படுத்த தேர்வுக்குழுவால் விராட் கோலி அழைக்கப்பட்டுள்ளார்.

    மிகவும் மோசமாக விளையாடிய தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழையாத நிலையில் கேப்டன் மட்டும் தொடரலாம் என்பதை காட்டுகிறது இந்த வழக்கத்திற்கு மாறான நடைமுறை காட்டுகிறது.

    கேப்டனாக விராட் கோலி நீடிக்கலாமா? என்பது குறித்து பேசுவதற்கு கூட்டம் கூட்டப்படாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய கூடியதில் இருந்து விராட் கோலி அவருடைய அணிக்கு கேப்டனா? அல்லது அவர் கேப்டனாக இருப்பதில் தேர்வு குழுவுக்கு  மகிழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

    விராட் கோலி

    நம்முடைய சிறந்த அறிவுக்கு எட்டியபடி விராட் கோலி உலகக்கோப்பை வரைதான் கேப்டன். அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்க ஐந்து நிமிடங்களே தேவைப்பட்டாலும், அதற்கான கூட்டம் அவசியம். இந்த தேர்வுக்குழுவில் கடைசி தேர்வு இது. வரைவில் புதிய தேர்வுக்குழு அமைய இருக்கிறது.  வருங்காலத்தில் வீரர்கள் அதிக்கம் இல்லாமல் தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்களோடு விளையாடும் அணி நிர்வாகம் அமையும் என நம்புவோம்’’ என்று எழுதியுள்ளார்.
    Next Story
    ×