search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MSK Prasad"

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால், தேர்வுக்குழுவில் உள்ள ஐந்து உறுப்பினர்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

    அதன்பின் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 எனக்கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி தொடரை வெற்றிகரமாக முடித்தது.

    இந்திய அணி சாதனைப் படைத்ததால் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கியது. இந்நிலையில் சிறந்த அணிகளை தேர்வு செய்ததற்காக ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    டோனி 20 ஓவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை ஓய்வுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #MSDhoni #MSKPrasad
    புனே:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது இந்த நீக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி 104 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 93 ஆட்டத்தில் டோனி ஆடி இருக்கிறார். 20 ஓவரில் தனித்திறமையை வெளிப்படுத்தும் அவரது நீக்கம் ஏமாற்றம் அளிக்கிறது.

    இந்த நிலையில் டோனி 20 ஓவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. அவருக்கு ஓய்வுதான் (6 ஆட்டம்) கொடுக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் 6 இருபது ஓவர் போட்டியில் டோனி இடம் பெறவில்லை. 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனால் டோனிக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது.



    20 ஓவர் போட்டியில் டோனியின் எதிர்காலம் முடிந்து விடவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    37 வயதான டோனி 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர். ஸ்டம்பிங் செய்வதில் வல்லவரான அவர் 93 ஆட்டத்தில் 1487 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் அவரது ஸ்டிரைக் ரேட் 127.07 ஆகும்.

    சேப்பாக்கத்தில் நவம்பர் 11-ந்தேதி நடைபெறும் 20 ஓவர் போட்டியில் ஆடாமல் இருப்பது தமிழக ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும். #INDvWI #MSDhoni #MSKPrasad
    இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் தேர்வுக்குழு பற்றி விமர்சனம் செய்த முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க இருக்கிறது. #BCCI #MuraliVijay
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்தில் மோசமான ஆட்டம் காரணமாக முரளி விஜய் கழற்றி விடப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காமலேயே கருண் நாயர் நீக்கப்பட்டார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் தேர்வு குழுவினர் மீது விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வு குழுவினர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர். தேர்வு கொள்கையையும் விமர்சித்து இருந்தனர். இதற்கு தேர்வு குழு தலைவர் எமஎஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில தேர்வு குழுவை விமர்சனம் செய்ததால் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கருண் நாயர்

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்வு கொள்கைகளை பற்றி பேசியதன் மூலம் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் வீரர்களின் ஒப்பந்தத்தை மீறி விட்டனர்.

    இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப்படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக்கூடாது. ஐதராபாத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எழுப்பபடும்” என்றார்.
    ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.



    ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கருண் நாயருக்கு தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #KarunNair
    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்தார். டெஸ்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு சில போட்டிகளில் சோபிக்காததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரும் அங்கம் வகித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

    இதனால் வேதனை அடைந்த 26 வயதான கருண் நாயர், ‘‘எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு விவாதிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் நேற்று கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு கருண் நாயரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அணித் தேர்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன். மறுபடியும் அணிக்குள் நுழைவதற்கான வழிமுறைகளை எடுத்து சொன்னேன். வீரர்கள் உடனான தகவல் தொடர்பு விஷயத்தை பொறுத்தவரை தேர்வு கமிட்டிக்கு என்று வகுக்கப்பட்ட நடைமுறையில் தெளிவாக இருக்கிறோம்.



    தகவல் தொடர்பு எப்போதும் தேர்வு கமிட்டிக்கு முக்கியமானது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் நீங்கள் அணியில் இல்லை என்ற மகிழ்ச்சியற்ற தகவலை சொல்வது கடினமானதாகும். அவ்வாறான சூழலில் நீங்கள் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு உரிய காரணத்தை சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

    எங்களது தேர்வாளர்களில் ஒருவரான தேவங் காந்தி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரினபோது கருண் நாயரிடம் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினார். அது மட்டுமின்றி அவருக்கு ஊக்கமளித்து வாய்ப்புக்காக காத்திருக்கும்படி ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அணிக்கு திரும்புவதற்கு கருண்நாயர், ரஞ்சி மற்றும் இந்திய ‘ஏ’ அணி போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும். நமது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திட்டத்தில் கருண் நாயருக்கும் நிச்சயம் இடம் உண்டு. தற்போது அவர் முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு எம்எஸ்கே பிரசாத் கூறினார்.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்த ரிஷப் பந்த்-ன் பேட்டிங் திறமை குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். #TeamIndia
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது 3-வது டெஸ்டில் 20 வயது ஆன ரிஷப் பந்த் அறிமுகமானார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

    இங்கிலாந்தில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்குரிய ரிஷப் பந்த் குறித்து பிரசாத் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் பேட் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவரது பேட்டிங் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும். எங்களுடைய ஒரே கவலை அவரது விக்கெட் கீப்பர் பணியை பற்றிதான். கீப்பர் பணியில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்.



    ஆனால் இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து அனுபவம் பெற்றுள்ளார். இதன்மூலம் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். ஒரு விக்கெட் கீப்பீங் சிறப்பு பயிற்சியின் கீழ் அவரை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம்.



    ரிஷப் பந்த் உடன் மேலும் சில புதிய இளம் விக்கெட் கீப்பிங் திறமைகளையும் அடையாளம் கண்டுள்ளோம். இவர்களுக்கும் ஒரு விக்கெட் கீப்பிங் சிறப்புப் பயிற்சியாளரின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவையாற்றுவார் என்றே நான் நம்புகிறேன்’’ என்றார்.
    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

    இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

    போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
    ×