என் மலர்

  நீங்கள் தேடியது "BCCI selection committee"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேத்தன் சர்மா தலைமையிலான முந்தைய தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது.
  • ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான செயல்முறையை பிசிசிஐ தொடங்கியதால், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இருப்பினும், சேத்தன் சர்மா தனது பதவியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

  தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பித்தவர்களில் சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ராத்ரா, எஸ்எஸ் தாஸ், எஸ்.ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நாளையும் நேர்காணல் தொடரும்.

  வெங்கடேஷ் பிரசாத் இந்த நேர்காணலுக்கான பட்டியலில் இல்லை. ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். #BCCI #IPL
  புதுடெல்லி:

  10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அணிகளை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘கெடு’ விதித்துள்ளது.

  உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 11 பேருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு. எஞ்சிய 4 இடத்திற்கு அம்பத்தி ராயுடு, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணித்தேர்வில் எடுத்துக் கொள்ளப்படாது என்று இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.

  அப்படி பார்த்தால் முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜொலிக்கவில்லை. ஆனால் ஐ.பி.எல்.-ல் அதிரடி காட்டுகிறார். மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து பிரமிப்பூட்டினார். ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஓரளவு நன்றாக ஆடினார். ஐ.பி.எல்.-ல் அவரது பேட்டிங் இதுவரை பெரிய அளவில் வெளிப்படவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் ஐ.பி.எல்.-ல் சொதப்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் கடைசி 3 ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.

  இதனால் உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஆடுகிறார்கள். அதனால் ஐ.பி.எல். தான் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், சில வீரர்களின் இடங்களை தீர்மானிக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆருடம் கூறியுள்ளார். #BCCI #IPL
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
  இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

  ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.  ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

  அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கருண் நாயருக்கு தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #KarunNair
  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்தார். டெஸ்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு சில போட்டிகளில் சோபிக்காததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

  சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரும் அங்கம் வகித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

  இதனால் வேதனை அடைந்த 26 வயதான கருண் நாயர், ‘‘எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு விவாதிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

  இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் நேற்று கூறியதாவது:-

  வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு கருண் நாயரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அணித் தேர்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன். மறுபடியும் அணிக்குள் நுழைவதற்கான வழிமுறைகளை எடுத்து சொன்னேன். வீரர்கள் உடனான தகவல் தொடர்பு விஷயத்தை பொறுத்தவரை தேர்வு கமிட்டிக்கு என்று வகுக்கப்பட்ட நடைமுறையில் தெளிவாக இருக்கிறோம்.  தகவல் தொடர்பு எப்போதும் தேர்வு கமிட்டிக்கு முக்கியமானது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் நீங்கள் அணியில் இல்லை என்ற மகிழ்ச்சியற்ற தகவலை சொல்வது கடினமானதாகும். அவ்வாறான சூழலில் நீங்கள் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு உரிய காரணத்தை சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

  எங்களது தேர்வாளர்களில் ஒருவரான தேவங் காந்தி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரினபோது கருண் நாயரிடம் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினார். அது மட்டுமின்றி அவருக்கு ஊக்கமளித்து வாய்ப்புக்காக காத்திருக்கும்படி ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அணிக்கு திரும்புவதற்கு கருண்நாயர், ரஞ்சி மற்றும் இந்திய ‘ஏ’ அணி போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும். நமது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திட்டத்தில் கருண் நாயருக்கும் நிச்சயம் இடம் உண்டு. தற்போது அவர் முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  இவ்வாறு எம்எஸ்கே பிரசாத் கூறினார்.
  ×