search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chetan Sharma"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
    • சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல சர்ச்சைகுரிய கருத்துகளை சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார்.

    இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார். 

    • அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    • காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.

    முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு உள்ளார். அவரது இந்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்தன் சர்மா கசிய விட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஈகோ இருந்தது உண்மைதான். ரோகித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக செயல்பட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் விராட் கோலியையும், கங்குலிக்கு அவ்வளவாக பிடிக்காது.

    அணி கூட்டம் ஒன்றில் கோலி சொன்ன விஷயத்துக்கு எதிராக கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி விமர்சித்தார். அப்போது முதல் இருவருக்குமே தீர்க்க முடியாத பிரச்சினை எழுந்து விட்டது.

    தனது கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று கோலி நினைத்தார். அதே நேரத்தில் கங்குலிக்கு எப்போதுமே கோலியை பிடிக்காது.

    வீடியோ கால் மூலம் நடந்த தேர்வு குழு சந்திப்பில் என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர் பங்கேற்று இருந்தார்கள். அப்போது கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு மறுபரிசீலனை செய்ய சொல்லி கங்குலி ஒரு முறை கேட்டுள்ளார். அதை கோலி கவனிக்காமல் விட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் விலகல் முடிவை கங்குலி மறு பரிசீலனை செய்ய சொல்லவில்லை என்று கோலி பேசியிருந்தார். கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால் கோலி அப்படி சொன்னது ஏன் என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை.

    20 ஓவர் அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். 20 ஓவர் அணியில் ரோகித் சர்மா இனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்த்திக் பாண்ட்யாவே கேப்டன் ஆவார்.

    பும்ராவால் தனது முதுகை வளைக்க கூட முடியவில்லை. அவரை போன்ற காயம் அடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி எடுத்து கொண்டு முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். முழுமையாக உடல் தகுதி இல்லாத வீரர்கள் இப்படி ஊசி மருந்துகளை எடுத்து கொண்டு 80 சதவீத உடல் தகுதியுடன் ஆடி இருக்கிறார்கள்.

    இந்திய அணியில் ரோகித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் பலமுறை எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு சேத்தன் கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சை காரணமாக சேத்தன் சர்மா மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

    • தேர்வுக்குழுவின் 5 பதவிகளுக்கான விளம்பரத்தைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
    • தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை கிரிக்கெட் ஆலோசனைக் குழு பட்டியலிட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து, கடும் விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ கடந்த நவம்பர் மாதம் கலைத்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வுக்குழுவுக்கு ஹர்வீந்தர் சிங்கும் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்குப் பிறகு அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

    இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 பதவிகளுக்கான விளம்பரம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்த பிறகு, தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை ஆலோசனைக் குழு பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், தேர்வுக் குழுவிற்கு தேர்வானர்களின் பெயர்களை ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

    • சேத்தன் சர்மா தலைமையிலான முந்தைய தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது.
    • ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான செயல்முறையை பிசிசிஐ தொடங்கியதால், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இருப்பினும், சேத்தன் சர்மா தனது பதவியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

    தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பித்தவர்களில் சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ராத்ரா, எஸ்எஸ் தாஸ், எஸ்.ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நாளையும் நேர்காணல் தொடரும்.

    வெங்கடேஷ் பிரசாத் இந்த நேர்காணலுக்கான பட்டியலில் இல்லை. ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×