என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கிரிக்கெட் வாரியம்"

    • தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார்.
    • எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார். சுபர்கோ, பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ்.சரத் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இதில் எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தேர்வு குழுவில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.

    கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் ஆர்.பி.சிங், ஓஜா ஆகியோர் பெயர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும்.

    இடது கை வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங் 2007 -ம் ஆண்டு டோனி தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தார். 39 வயதான அவர் 82 சர்வதேச போட்டிகளில் 124 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மத்திய மண்டலத்தில் இருந்து அவர் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிறார்.

    இடது கை சுழற்பந்து வீரரான ஓஜா தெற்கு மண்டலத்தில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரா கிறார். அவர் 24 டெஸ்டில் 113 விக்கெட் கைப்பற்றியுள் ளார். ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும் (18 போட்டி), 20 ஓவர் ஆட்டத்தில் 10 விக்கெட்டும் (6 போட்டி) எடுத்தவர்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது.
    • டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்டமசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான 'டிரீம் 11' அந்தப் பொறுப்பில் இருந்து விலகியது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது. அந்த நிறுவனம் ரூ.358 கோடிக்கு கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியது. அந்த நிறுவனம் முன்னதாகவே விலகியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) புதிய ஸ்பான்சரை தேடுகிறது.

    புதிய ஸ்பான்சரை பி.சி. சி.ஐ. ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2025 முதல் 2028 வரை புதிய ஸ்பான்சர் இருக்கும். டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதோடு இருதரப்பு போட்டிக்கு ரூ.3½ கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளுக்கு ரூ.1.5 கோடியும் இலக்காக பி.சி.சி.ஐ. நிர்ணயித்துள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி விரைவில் தொடங்க உள்ளதால் ஸ்பான்சர் இல்லாத சீருடை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    • கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது.
    • வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2023-24-ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.9,741.7 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.பி.எல்.லின் பங்களிப்பு ரூ.5,761-ஆக உள்ளது.

    சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் உள்பட ஐ.பி.எல் அல்லாத ஊடக உரிமைகளை விற்றதன் மூலம் ரூ.361 கோடி கிடைத்தது. கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வட்டியை ஈட்டுகிறது. ஸ்பான்சர்ஷிப்கள், ஊடக ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி நாள் வருவாய் உள்ளிட்டவை மூலம் கணிசமான வருவாய் வருகிறது.

    இந்த வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர், கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    • இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளன.

    இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. அறிமுக போட்டியான 2007ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதன் பிறகு 2014 போட்டிக்கான 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றது. இதுவரை 2 முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.

    2024-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியிலாவது சாம்பியன் பட்டம் பெற்று விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.பி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. இதனால் இப்போதே இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    உலக கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட்கோலி ஆகியோர் இனி வரும் 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது.

    ஹர்திக் பாண்ட்யா அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவர் ஏற்கனவே பல தொடர்களில் கேப்டனாக இருந்து 20 ஓவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் நீண்ட காலத்துக்கு 20 ஓவர் அணியின் கேப்டனாக செயல்பட கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட 20 ஓவர் அணியை தான் கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சேட்டன் சர்மா தொடர்ந்து தேர்வு குழு தலைவராக நீடிக்கப்பட்டு உள்ளார்.

    20 ஓவர் போட்டியின் எதிர்காலம் தொடர்பாக அவர் ரோகித்சர்மா, வீராட்கோலி ஆகியோருடன் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்தை எடுத்துரைப்பார். அவர்களாகவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பேத கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக உள்ளது.

    ரோகித் சர்மா 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20 ஓவர் போட்டியில் ஆடினார். வீராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 ஓவரில் ஆடினார்.

    இருவரும் 20 ஓவர் உலக கோப்பைக்கு கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால் கோப்பையை வென்றது இல்லை. இதனால் தான் தற்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 34 வயதான வீராட் கோலி 115 போட்டியில் 107 இன்னிங்சில் 4008 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும், 37 அரை சதமும் அடங்கும். 35 வயதான ரோகித் சர்மா 140 ஆட்டத்தில் 3853 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 சதமும், 29 அரை சதமும் அடித்துள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
    • தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. வரும் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியானது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ×