search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian cricket team chairman of selectors"

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்த ரிஷப் பந்த்-ன் பேட்டிங் திறமை குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். #TeamIndia
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது 3-வது டெஸ்டில் 20 வயது ஆன ரிஷப் பந்த் அறிமுகமானார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

    இங்கிலாந்தில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்குரிய ரிஷப் பந்த் குறித்து பிரசாத் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் பேட் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவரது பேட்டிங் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும். எங்களுடைய ஒரே கவலை அவரது விக்கெட் கீப்பர் பணியை பற்றிதான். கீப்பர் பணியில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்.



    ஆனால் இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து அனுபவம் பெற்றுள்ளார். இதன்மூலம் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். ஒரு விக்கெட் கீப்பீங் சிறப்பு பயிற்சியின் கீழ் அவரை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம்.



    ரிஷப் பந்த் உடன் மேலும் சில புதிய இளம் விக்கெட் கீப்பிங் திறமைகளையும் அடையாளம் கண்டுள்ளோம். இவர்களுக்கும் ஒரு விக்கெட் கீப்பிங் சிறப்புப் பயிற்சியாளரின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவையாற்றுவார் என்றே நான் நம்புகிறேன்’’ என்றார்.
    ×