என் மலர்

  நீங்கள் தேடியது "Team India chief selector"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

  இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

  இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

  இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

  போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
  ×