search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்செஸ்டர் யுனைடெட்
    X
    மான்செஸ்டர் யுனைடெட்

    மிகவும் மதிப்புமிக்க கிளப் அணிகள் பட்டியல்: 6-வது இடத்திற்கு சரிந்தது மான்செஸ்டர் யுனைடெட்

    போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள மிகவும் மதிப்புமிக்க கிளப் அணிகள் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் மிகவும் மதிப்புமிக்க கிளப் அணிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் பிரிட்டனின் தலைசிறந்த கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    டல்லாஸ் கவ்பாய்ஸ்

    அமெரிக்காவின் டல்லாஸ் கவ்பாய்ஸ் கிளப் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இந்த கிளப்பின் மதிப்பு 5 பில்லியன் டாலராகும். நியூயார்க் யங்கீஸ் என்ற பேஸ்பால் கிளப் அணி 4.6 பில்லியன் டாலருடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளான ரியல் மாட்ரிட் 4.24 பில்லியன் டாலருடன் 3-வது இடத்தையும், பார்சிலோனா 4.02 பில்லியன் டாலருடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    Next Story
    ×