என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்
Byமாலை மலர்18 July 2019 3:56 PM GMT (Updated: 18 July 2019 3:56 PM GMT)
2023 உலகக்கோப்பைக்கான சிறந்த விக்கெட் கீப்பரை உருவாக்குவதற்கான முக்கியமான நேரம் இது என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. அன்றில் இருந்து தற்போது வரை விக்கெட் கீப்பரான டோனியின் நிலை என்ன? என்பதுதான். அவருடன் இதுவரை மவுனம் திறக்கவில்லை. தேர்வுக்குழுவும் ஒன்றும் சொல்லவில்லை.
வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி நாளை அல்லது நாளைமறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது. அப்போதுதான் டோனியின் நிலை குறித்து தெரியும்.
இந்நிலையில் டோனிக்குப் பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்தவற்கான முக்கியமான நேரம் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ? அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும். ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த நபரை தேர்வு செய்யலாம். அப்டி செய்தால் அடுத்த உலகக்கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்து விடலாம்’’ என்றார்.

இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘தற்போது எதிர்காலத்தை பற்றி யோசிப்பது மிகவும் முக்கியமானது. டோனி கேப்டனாக இருக்கும்போது, வருங்காலத்தைப் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் வைத்து டோனி என்ன சொன்னார் என்பது நான் உங்களுக்கு நியாபகப் படுத்துகிறேன். அவர் நான், சச்சின், சேவாக் ஆகியோர் ‘சிபி சீரியஸ்’ தொடரில் இணைந்து விளையாட முடியாது. மைதானங்கள் பெரியதாக இருப்பதால் பீல்டிங் செய்ய இயலாது என்று கூறினார். அவர் 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எங்கள் மூவருக்கும் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி வருகிறார் என்பதை வெளிப்படுத்தத்தான் அவ்வாறு கூறினார். எமோசனல் ஆவதை விட செய்முறை முடிவுகளை எடுப்பது அவசியம்.
தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ? அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும். ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த நபரை தேர்வு செய்யலாம். அப்டி செய்தால் அடுத்த உலகக்கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்து விடலாம்’’ என்றார்.
Next Story
×