search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒல்டு டிராபோர்ட் மைதானம்
    X
    ஒல்டு டிராபோர்ட் மைதானம்

    இன்றும் மழைக்கு வாய்ப்பு - டக்வொர்த் லீவிஸ் விதி யாருக்கு சாதகம்?

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய அரைஇறுதி ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் டக்வொர்த் லீவிஸ் விதி யாருக்கு சாதகமாக அமையும் என்பதை பார்க்கலாம்.
    மான்செஸ்டர்:

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராபோர்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் டெய்லர் 67 ரன்னிலும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), டாம் லாதம் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    கேப்டன் வில்லியம்சன் 67 ரன் எடுத்தார். பும்ரா, புவனேஸ்வர்குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. 20 ஓவர் வரையாவது நடத்தலாம் என்று கருதினர். ஆனால் ‘அவுட் பீல்டு’ ஈரப்பதமாக இருந்தால் அதுவும் நடத்த இயலாமல் போனது.

    இதைத்தொடர்ந்து மாற்று தினமான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இங்கிலாந்து நேரம் காலை 10.30) போட்டி தொடங்கும்.

    நியூசிலாந்து அணி அதே நிலையில் (211/5) தெடர்ந்து விளையாடும். அந்த அணி எஞ்சிய 23 பந்துகளில் பேட்டிங் செய்த பிறகு இந்திய அணி விளையாடும்.

    ஆனால் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    காலை நேரத்தில் மழை பெய்ய 35 முதல் 47 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகவும், படிப்படியாக அதிகரித்து 51 சதவீதம் வரை உயரும் என்று வானிலை இலாகா தெரிவிக்கிறது.

    நன்பகலில் மழை குறைய தொடங்கி பின்னர் மாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சம் 21 டிகிரியாக இருக்கும்.

    ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு போட்டி நடத்தும் சூழ்நிலை உருவானால் ஓவர்கள் குறைக்கப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு நிர்ணயிக்கப்படும். நியூசிலாந்தின் இன்னிங்ஸ் அதோடு முடித்துக் கொள்ளப்படும்.

    இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்கு விவரம்:-

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படியான இலக்கு நியூசிலாந்து அணிக்கு சாதகமானது.

    மேலும் மழை பெய்தால் இந்த ஆடுகளத்தில் ரன் இலக்கை எட்டுவது சவாலானது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீரர்கள் டிரென்ட் போல்ட், பெர்டுசன் சவாலாக இருப்பார்கள்.

    மழை வாய்ப்பு சூழ்நிலையை பார்க்கும்போது 20 ஓவர் போட்டியாக நடத்த அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியும் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டு ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியாவுக்கு சாதகமே. ‘லீக்’ சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இரு அணிகள் இடையேயான ‘லீக்’ ஆட்டம் மழையால் ஒருபந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×