search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சிகளால் பிளவுபட்டாலும் கிரிக்கெட்டால் ஒன்றிணைந்த கோவா அரசியல் தலைவர்கள்
    X

    கட்சிகளால் பிளவுபட்டாலும் கிரிக்கெட்டால் ஒன்றிணைந்த கோவா அரசியல் தலைவர்கள்

    கோவாவின் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டியை காண கூட்டாக இங்கிலாந்து சென்றுள்ளனர்.
    மான்செஸ்டர்: 

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

    இப்போட்டியை  காண கோவாவின் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் கூட்டாக சென்றுள்ளனர். 

    துணை முதல்வரும், கோவா முன்னணி கட்சி தலைவருமான விஜய் சர்தேசாய், பாஜகவை சேர்ந்த டட்டா பிரசாத் நாயக் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மான்செர்ரேட் ஆகியோர் இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டியை காண இங்கிலாந்து சென்றுள்ளனர்.   



    இதுகுறித்து சர்தேசாய் கூறுகையில், "இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் அரசியலால் பிளவுபட்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவை ஆதரிப்பதற்காக இங்கே நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

    கோவா சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் மான்செர்ரேட்டிடம் பாஜகவை சேர்ந்த டட்டா பிரசாத் நாயக் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், கிரிக்கெட் இவர்களை ஒன்றிணைத்துள்ளது.
    Next Story
    ×