என் மலர்

  செய்திகள்

  இந்திய அணியின் முதல் ஆட்ட பதற்றம் தென்ஆப்பிரிக்காவுக்கு உதவக்கூடும்- காலிஸ் சொல்கிறார்
  X

  இந்திய அணியின் முதல் ஆட்ட பதற்றம் தென்ஆப்பிரிக்காவுக்கு உதவக்கூடும்- காலிஸ் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி ஒரு வாரமாக விளையாடவில்லை. முதல் ஆட்டத்தில் ஆடுவதால் அந்த அணியினருக்கு பதற்றம் உருவாகலாம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியுள்ளார்.
  லண்டன்:

  தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்து இருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதனால் அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும். 

  இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். இது தென்ஆப்பிரிக்க அணிக்கு 3-வது ஆட்டமாகும். இந்திய அணிக்கு முதல் ஆட்டமாகும். இதனால் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. 

  இந்திய அணி ஒரு வாரமாக விளையாடவில்லை. முதல் ஆட்டத்தில் ஆடுவதால் அந்த அணியினருக்கு பதற்றம் உருவாகலாம். இது தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கக்கூடும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நமது அணி சிறிய தவறு செய்தாலும் தோல்வியை சந்திக்க நேரிடும். தென்ஆப்பிரிக்க அணி எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு முன்னேற முடியும்’ என்று தெரிவித்தார்.
  Next Story
  ×