என் மலர்

  செய்திகள்

  உலக கோப்பையில் வார்னர், ஆர்ச்சர், ரஷித்கான் முத்திரை பதிப்பார்கள்- தெண்டுல்கர் கணிப்பு
  X

  உலக கோப்பையில் வார்னர், ஆர்ச்சர், ரஷித்கான் முத்திரை பதிப்பார்கள்- தெண்டுல்கர் கணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பையில் முத்திரை பதிக்கக்கூடிய இந்தியர் அல்லாத வீரர்கள் யார்? என்று தெண்டுல்கரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

  லண்டன்:

  கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கி உள்ளார். உலக கோப்பை போட்டியையொட்டி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் வர்ணனையாளராக இருக்கிறார்.

  வர்ணனையின் போது தெண்டுல்கர் ஆட்டத்தின் நுணுக்கங்கள் பற்றி பல கருத்துக்களை கூறி வருகிறார்.

  உலக கோப்பையில் முத்திரை பதிக்கக்கூடிய இந்தியர் அல்லாத வீரர்கள் யார்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து தெண்டுல்கர் கூறியதாவது:-

  வெளிநாட்டு பேஸ்ட்மேன்களில் என்னை கவர்ந்தவர் வார்னர். ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடியவர். ஐ.பி.எல். போட்டியில் அவர் தனது மட்டையால் பதிலடி கொடுத்தார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். உலக கோப்பையில் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.


  பந்து வீச்சாளர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

  எப்படி வேண்டுமானாலும் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய நேர்த்தியான பவுலர் ஆர்ச்சர். அடுத்து நான் கவனிக்க வேண்டிய பந்து வீச்சாளர் ரஷித்கான். ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

  1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நான் பேட்டுடன் அறிமுகமானேன். தற்போது 30 ஆண்டுகள் கழித்து (2019) நான் கையில் ‘மைக்’ வைத்திருக்கிறேன். இரண்டையும் ஒன்றாகவே நான் உணர்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×