search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தவானின் அதிரடி சதத்தால் 200 ரன்களை எட்டிய இந்தியா
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தவானின் அதிரடி சதத்தால் 200 ரன்களை எட்டிய இந்தியா

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தவானின் அதிரடி சதத்தால் இந்திய அணி 200 ரன்களை எடுத்துள்ளது. #INDvAFG
    பெங்களூர்:

    ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டை இந்தியாவுடன் விளையாட விரும்பியது.

    அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றார். முரளிவிஜய், தவான் இருப்பதால் அவர் மிடில் ஆர்டரில் 4-வது வரிசையில் ஆடுவார். இதே போல தினேஷ்கார்த்திக் 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் இடம் பெற்றார்.

    இந்திய அணி கேப்டன் ரகானே ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

    முரளிவிஜய்யும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வபதார் வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரில் தவான் 2 பவுண்டரி அடித்தார். இதேபோல முரளிவிஜய் யாமி ஓவரில் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார்.

    இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தவானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை விளாசி தள்ளினார்.

    47 பந்தில் அவர் அரை சதத்தை தொட்டார். இந்திய அணி 19.4-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது.



    தவான் தொடர்ந்து அபாரமாக விளையாடி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்தார். 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 30-வது டெஸ்டில் விளையாடும் தவானுக்கு இது 7-வது சதமாகும்.

    மறுமுனையில் இருந்த தமிழக வீரர் முரளி விஜய்யின் ஆட்டம் மெதுவாகவே இருந்தது.



    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 158 ரன் எடுத்து இருந்தது. தவான் 104 ரன்னும், முரளிவிஜய் 41 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய தவான் 96 பந்துகளில் 107 ரன்களில் யாமின் அகமத்ஜாய் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராகுல், விஜயுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

    தற்போது வரை இந்திய அணி 37 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்து விளையாடி கொண்டிருக்கிறது. ராகுல் 21 பந்துகளில் 6 ரன்களுடனும், முரளி விஜய் 107 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். #INDvAFG
    Next Story
    ×