என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா
Byமாலை மலர்1 March 2018 12:07 AM GMT (Updated: 1 March 2018 12:07 AM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை துவம்சம் செய்தது. #HeroISL #GoaFC #AtlticodeKolkata
கோவா:
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை துவம்சம் செய்தது. செர்ஜியோ ஜஸ்ட், மானுல் லான்ஜரோட் (2), கோரோமினாஸ், மார்க் சிப்னியாஸ் ஆகியோர் கோவா அணியில் கோல் போட்டனர். கோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.
கோவா அணி 17 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. கோவா அணி வருகிற 4-ந்தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (26 புள்ளி) சந்திக்கிறது. இதில் கோவா அணி ‘டிரா’ செய்தாலே 4-வது அணியாக அரைஇறுதியை எட்டி விடலாம். ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்லும். ஏற்கனவே பெங்களூரு, புனே சிட்டி, சென்னையின் எப்.சி. அணிகள் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன. #HeroISL #GoaFC #AtlticodeKolkata

Next Story
×