search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் திறனை பெற்றுள்ளார்: கல்லீ்ஸ்
    X

    கோலி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் திறனை பெற்றுள்ளார்: கல்லீ்ஸ்

    விராட் கோலி சொந்த நாட்டிற்கு வெளியே சிறப்பாக விளையாடும் திறனை பெற்றுள்ளார் என ஜேக்யூஸ் கல்லீஸ் தெரிவித்துள்ளார். #SAvIND #IPL2018 #KKR
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஜேக்யூஸ் கல்லீஸ். இவரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி சர்வதேச அளவில் மிகப்பெரிய இடத்தை அடைந்தது. தற்போதும் ஆல்ரவுண்டர் என்றால் சற்றென்று நினைவுக்கு வருபவர் கல்லிஸ்தான்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கல்லீஸ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

    ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஜேக்யூஸ் கல்லீஸ் பேட்டியளித்தார். அப்போது கூறுகையில் ‘‘நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், முற்றிலுமாக கிரிக்கெட்டை விட்டு விலகிவிடவில்லை. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன். இதனால் நான் கிரிக்கெட்டை தவற விடவில்லை.

    இந்தியா - தென்ஆப்பிரக்கா இடையிலான டெஸ்ட் தொடரை மிகவும் ஆழ்ந்து கவனிக்கவில்லை. என்னுடைய தொழில் ரீதியாக பிஸியாக இருந்தேன். ஆனால், தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது மிகவும் கடினம்.

    இந்திய அணி ஆசியக் கண்டத்தை தாண்டி வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்னேற வேண்டும்.

    விராட் கோலி இளம் வயதில் இருந்ததை விட தற்போது பிரம்மிக்க வைக்கும் வகையில் வளர்ந்துள்ளார். இதற்கு ஐபிஎல் ஒரு முக்கிய காரணம். ஏராளமான இளம் வீரர்கள் ஐபிஎல் மூலம் சிறந்த வீரராக மாறியுள்ளனர். விராட் கோலியின் வளர்ச்சிக்கு ஐபிஎல் மட்டும் காரணமல்ல. அவருடைய முன்னேற்றமும்தான் முக்கிய காரணம். அந்த முன்னேற்றம் மிகவும் விரைவாக நிகழ்ந்துள்ளது. இதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    விராட் கோலி எப்படி விளைாடுகிறார் என்பதை அவரது சாதனைகளே சொல்கிறது. இந்தியாவில் அவருடைய ஆட்டத்தை நிரூபித்துள்ளார். வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளார்.



    விராட் கோலி கேப்டன் பதவியை சிறப்பாக செய்து வருகிறார். தற்போது வரை கேப்டன் பதவியில் கற்றுக் கொண்டு வருகிறார். கேப்டன் பதவி என்பது அணியிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெறுவது.

    இந்தியாவை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பவுன்ஸ் இருக்கும். பவுன்ஸ் பந்தை எதிர்கொள்ளும் வகையில் இந்திய வீரர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதே வீரர்களை கொண்டு அவர்கள் அது போன்ற ஆடுகளத்தில் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் பவுன்சர் ஆடுகளம் வைத்தால் கூட, அதில் தவறு ஏதும் கிடையாது.

    அப்படி செய்வது கடினம்தான். இருந்தாலும் இது ஒன்றும் தவறான ஐடியா கிடையாது. மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடும் ஆடுகளத்தில் ஓரளவிற்கு கேரி மற்றும் பவுன்ஸ் இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×