search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு
    X

    இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு

    இலங்கை தொடரின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இவரது தலைமையில் இந்தியா தொடர்ச்சி வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறது. தொடர்ந்து விளையாடுவதால் வீரர்கள் சோர்வடைந்து வருகிறார். இதனால் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விரும்புகிறார். இதனடிப்படையில் தற்போது பல்வேறு வீரர்கள் ஓய்வில் இருந்து வருகிறார்.

    டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா இதுவரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை சந்தித்தது கிடையாது. இந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. இதற்காக வீர்ர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என பிசிசிஐ நினைக்கின்றது.

    விராட் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் இலங்கை தொடரின்போது இவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்தியா அணியில் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.



    இதனால் 3-வது டெஸ்ட் அல்லது 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஓய்வு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘கடந்த ஒரு வருடமாக விராட் கோலி அதிகமான போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகவே, அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. சுழற்சி முறை என்பது விராட் கோலி உள்பட எல்லோருக்கும் பொறுந்துவதாகும்.




    இந்தியா தென்ஆப்பிரிக்கா தொடரை வெல்லும் என்று நம்புகிறது. இதற்காக முழுமையாக தயாராக வேண்டும் என்று விரும்புகிறது. பிசிசிஐ இந்திய அணிக்கு எதுவேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×