என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உமர் அக்மல் நீக்கம்: பாக். கிரிக்கெட் வாரியம் விசாரணை
Byமாலை மலர்25 May 2017 6:54 AM GMT (Updated: 25 May 2017 6:55 AM GMT)
உமர் அக்மல் நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த உமர் அக்மல் உடல் தகுதி இல்லாததால் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஹாரிஸ் சோகைல் சேர்க்கப்பட்டார்.
2 முறை நடத்தப்பட்ட உடல் தகுதி சோதனையில் உமர் அக்மல் தோல்வி அடைந்தார். உமர் அக்மல் விவகாரத்தில் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்சமாம்- பயிற்சியாளர் ஆர்தர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் உமர் அக்மல் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார்கான் கூறுகையில், சாம்பியன்ஸ் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் எவ்வாறு உமர்அக்மல் உடல் தகுதியுடன் இடம் பெற்றார். அங்கு சென்ற பிறகு எப்படி உடல் தகுதியில் தோற்றார் என்பது பற்றி அறிய விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக விசாரணை நடக்கும் என்றார்.
Next Story
×