என் மலர்

  செய்திகள்

  சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தோனேஷியாவை வீழ்த்தியது இந்தியா
  X

  சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தோனேஷியாவை வீழ்த்தியது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதலாவது குரூப்பில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
  கோல்டு கோஸ்ட் :

  சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது குரூப்பில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் ஆட்டத்தில் டென்மார்க்கிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது. அடுத்து இந்திய அணி நேற்று முன்னாள் சாம்பியன் இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.

  இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-19 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பிட்ரியானியை பந்தாடினார். ஆண்கள் ஒற்றையரில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சாய்த்தார்.  இந்திய வீராங்கனை அஸ்வினி பெண்கள் இரட்டையரில் ரெட்டி என்.சிக்கியுடனும், கலப்பு இரட்டையரில் ராங்கி ரெட்டியுடனும் இணைந்து வெற்றியை தேடித்தந்தார். இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடியான ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி மட்டும் தோல்வி கண்டனர். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

  இன்றைய கடைசி லீக்கில் டென்மார்க்- இந்தோனேஷியா அணிகள் மோதுகின்றன. இதில் இந்தோனேஷியா தோற்றால் இந்தியாவும், டென்மார்க்கும் நாக்-அவுட் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறி விடும். இந்தோனேஷியா வெற்றி பெற்றால் 3 அணிகளும் சமநிலை வகிக்கும். அப்போது புள்ளி மற்றும் செட் அடிப்படையில் இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.
  Next Story
  ×