என் மலர்

    செய்திகள்

    சாம்பியன் கோப்பையுடன் ஸ்விடோலினா, ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ்
    X
    சாம்பியன் கோப்பையுடன் ஸ்விடோலினா, ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ்

    இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்விடோலினா, ஸ்வெரேவ் சாம்பியன் - ஜோகோவிச் தோல்வி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
    ரோம் :

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பறிகொடுத்த ஸ்விடோலினா, அடுத்த இரு செட்டுகளில் எழுச்சி பெற்று ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்தார்.

    முடிவில் ஸ்விடோலினா 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கினார். இந்த ஆண்டில் அவர் வென்ற 4-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் அவர் டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார். வலது கணுக்காலில் காயத்தால் அவதிப்பட்ட ஹாலெப் 2-வது செட்டின் போது சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது.



    இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீனத்தைபே) ஜோடி 7-5, 7-6(4) என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் ரஷியாவின் மகரோவா- எலினா வெஸ்னினா இணையை தோற்கடித்து பட்டத்தை வென்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மை நேர் செட்டில் பந்தாடிய 4 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச்(செர்பியா), இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் இளம் புயல் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியான ஷாட்டுகளால் ஜோகோவிச்சை மிரள வைத்த 20 வயதான ஸ்வெரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றிக்கனியை பறித்தார். இந்த போட்டி ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் அவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
    Next Story
    ×