என் மலர்

  நீங்கள் தேடியது "Italy Open Tennis"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

  ரோம்:

  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 6-1 என ஸ்வரேவ் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.  சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஷிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

  ரோம்:

  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. 

  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்திய ஸ்வேரேவ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

  மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இதில் 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

  இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
  ×