என் மலர்
விளையாட்டு
- அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்கா வீரர் வென்றார்.
- அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்கா கேப்டன் வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.
சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இடம்பெற்றனர்.
இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் டி மினார் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில், 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அலெக்ஸ் டி மினார் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முசெட்டி 7-5 என வென்றார்.
- முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் ஒரு விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
சிலெட்:
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்து வருகிறது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டகாரர் ஷட்மன் இஸ்லாம் 80 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மொமினுல் ஹக் 80 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், ஹசன் ஜாய் வரலாற்றை மாற்றி எழுதுவார் என ஷட்மன் இஸ்லாம் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஷட்மன் கூறுகையில், சிறப்பாக ஆடி வரும் ஹசன் ஜாய் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை நிச்சயம் செய்து காட்டுவார் என தெரிவித்தார்.
வங்கதேச அணிக்காக ஒரு இன்னிங்சில் அதிகமாக முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குமாமாடோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- முதல் சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-1 என வென்றார்.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
- சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா, சாம் கர்ரனை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
- சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கேப்டன் பதவியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை ஜடேஜா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் துருவ் ஜுரல் பேட்ஸ்மேனாக களம் இறங்குகிறார்.
- நிதிஷ் ரெட்டி ஆடும் லெவனில் இடம் பெற முடியாததால், 50 ஓவர் போட்டியில் விளையாட அணி விரும்புகிறது.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமுறுதினம் (14-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இடம் பிடித்திருந்தார். காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் ஜுரலை அணி நிர்வாகம் பேட்ஸ்மேனாக ஆடும் லெவனில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதனால் நிதிஷ் ரெட்டிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ராஜகோட்டில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ஏ அணியில் இணைய உள்ளார்.
- எந்த அணியுடனும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தரத்தை நீங்கள் ஒப்பிட முடியாது.
- WTC இறுதிப் போட்டியின் சவாலை நான் சமமாக மதிப்பிடுவேன்.
தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது குறித்து தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனது 20 வருட வாழ்க்கையில் இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடுவது மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறேன். ஆம், நாங்கள் WTC இறுதிப் போட்டியிலும் விளையாடினோம், ஆனால் அந்த சவாலை நான் சமமாக மதிப்பிடுவேன். எந்த அணியுடனும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தரத்தை நீங்கள் ஒப்பிட முடியாது.
சூழல் சாதகமானதாக இருந்தால், அந்த விஷயத்திலும் இந்தியாவை சவால் செய்ய எங்களிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
இந்தியாவில் வரலாறு படைப்போம் என்று தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் விளையாடுவார்.
தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடுல் லெவனில் இருப்பார் என்பது உறுதி. அதேசமயம் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான துருவ் ஜூரல் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.
அவர் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக விளையாட உள்ளார் என்ற கூடுதல் தகவலும் தெரிய வந்துள்ளது.
- பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார்.
- முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.
- விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷெஃபீல்ட் சீல்ட் (Sheffield Shield 2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் விளையாடிய சவுத் வேல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில் 117 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பந்து வீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவரது பேட்டின் நுணியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது.
அவர் கேட்ச் பிடித்ததை பார்த்த பேட்டர் ஷாக் ஆகி கிழே விழுவதுபோல ரியாக்ஷன் கொடுப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






