என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவில் வரலாறு படைப்போம்- தெ. ஆப்பிரிக்கா பயிற்சியாளர் நம்பிக்கை
    X

    இந்தியாவில் வரலாறு படைப்போம்- தெ. ஆப்பிரிக்கா பயிற்சியாளர் நம்பிக்கை

    • எந்த அணியுடனும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தரத்தை நீங்கள் ஒப்பிட முடியாது.
    • WTC இறுதிப் போட்டியின் சவாலை நான் சமமாக மதிப்பிடுவேன்.

    தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது குறித்து தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எனது 20 வருட வாழ்க்கையில் இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடுவது மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறேன். ஆம், நாங்கள் WTC இறுதிப் போட்டியிலும் விளையாடினோம், ஆனால் அந்த சவாலை நான் சமமாக மதிப்பிடுவேன். எந்த அணியுடனும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தரத்தை நீங்கள் ஒப்பிட முடியாது.

    சூழல் சாதகமானதாக இருந்தால், அந்த விஷயத்திலும் இந்தியாவை சவால் செய்ய எங்களிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

    இந்தியாவில் வரலாறு படைப்போம் என்று தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×