என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹசன் ஜாய் நிச்சயம் இதை செய்வார்: வங்கதேச தொடக்க வீரர் நம்பிக்கை
    X

    ஹசன் ஜாய் நிச்சயம் இதை செய்வார்: வங்கதேச தொடக்க வீரர் நம்பிக்கை

    • முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் ஒரு விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.

    சிலெட்:

    அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்து வருகிறது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டகாரர் ஷட்மன் இஸ்லாம் 80 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மொமினுல் ஹக் 80 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், ஹசன் ஜாய் வரலாற்றை மாற்றி எழுதுவார் என ஷட்மன் இஸ்லாம் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஷட்மன் கூறுகையில், சிறப்பாக ஆடி வரும் ஹசன் ஜாய் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை நிச்சயம் செய்து காட்டுவார் என தெரிவித்தார்.

    வங்கதேச அணிக்காக ஒரு இன்னிங்சில் அதிகமாக முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×