என் மலர்
விளையாட்டு
- நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.
- விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷெஃபீல்ட் சீல்ட் (Sheffield Shield 2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் விளையாடிய சவுத் வேல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில் 117 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பந்து வீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவரது பேட்டின் நுணியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது.
அவர் கேட்ச் பிடித்ததை பார்த்த பேட்டர் ஷாக் ஆகி கிழே விழுவதுபோல ரியாக்ஷன் கொடுப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.
- ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
மும்பை:
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர். கடைசியாக அக்டோபர் 2025-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினர்.
இரண்டு முக்கிய வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர்களுக்குப் போதுமான போட்டி அனுபவம் கிடைக்காது என பிசிசிஐ கருதுகிறது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தனது முடிவை உறுதி செய்துள்ளார். மேலும், நவம்பர் 26-ல் தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் 30-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளதால், சையத் முஷ்டாக் அலி தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆனால், மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி, இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்தவிதமான தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. கோலி கடைசியாக 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவரை போன்ற வீரருக்கு ரூ.23¾ கோடி என்பது ரொம்பவே அதிகம்.
- 2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார்.
மும்பை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யரை ரூ.23¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அவரை போன்ற வீரருக்கு இவ்வளவு தொகை என்பது ரொம்பவே அதிகம். மிடில் ஆர்டரில் அவர் வெவ்வேறு வரிசையில் இறக்கப்படுகிறார். அத்துடன் பந்து வீச்சில் அவரை பயன்படுத்துவதில்லை. 2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார்.
2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் (11 ஆட்டத்தில் 142 ரன்கள் எடுத்தார்) அவரது சீரற்ற பேட்டிங் வரிசை மற்றும் மெகா தொகைக்கு ஏலம் போனதால் விழுந்த முத்திரை அவருக்கு சரியாக பொருந்தவில்லை.
எனவே அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து கொல்கத்தா அணி பரிசீலிக்க வேண்டும். இதனால் அணியின் இருப்புத் தொகையும் அதிகமாகும். இப்போது அவரை விடுவித்து விட்டு ஏலத்தில் ஓரளவு நல்ல தொகைக்கு அவரை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.
- பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள்.
- அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது.
மும்பை:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய 6 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. போட்டிகளை நடத்த புனே மைதானம் விருப்பத்துடன் இருப்பதாக மராட்டிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
- ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் பிரதாப் சிங் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.
- மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (432.6) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கெய்ரோ:
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பந்தயத்தில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.
சீன வீரர் யுகுன் லூ 467.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பிரான்ஸ் வீரர் ரோமைன் (454.8 புள்ளி) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (432.6) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னதாக தகுதி சுற்றில் ஐஸ்வரி பிரதாப் சிங் 597 புள்ளிகள் குவித்து உலக சாதனையை சமன் செய்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷா சிங்-சம்ரத் ராணா இணை 10-16 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியான்சூன் யாவ்-காய் ஹூ ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இதுவரை இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்று பதக்கபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன்.
- தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.
கொல்கத்தா:
இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த தொடர், 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாங்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமன் செய்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். நல்ல பார்மில் இருப்பதால் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன். வலுவான அணிக்கு எதிராக ஆடுவது எனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்' என்றார்.
- பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது.
- பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. சல்மான் ஆகா சதம் அடித்தார்.
அவர் 87 பந்தில் 105 ரன்னும் (9 பவுண்டரி), ஹூசைன் தலத் 62 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசரங்கா 52 பந்தில் 59 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
- கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
- அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்.
2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை போட்டியாகும்.
ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணியாகவும் 950-க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.
- தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார்.
- இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார்.
கோவா:
'பிடே' 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும். எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், விதித் குஜராத்தி 3-வது சுற்றுடன் நடையை கட்டினர்.
இந்த நிலையில் போட்டியின் 4-வது சுற்றில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. 41-வது நகர்த்தலில் டிரா கண்டார். இவர்கள் இருவரும் இன்று மீண்டும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் 5-வது சுற்றுக்கு முன்னேறுவார். இதிலும் சமநிலை நீடித்தால் ஆட்டம் டைபிரேக்கருக்கு நகரும்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார். 20-வது நகர்த்தலிலேயே இருவரும் டிராவுக்கு ஒப்புக் கொண்டனர். இதே போல் கார்த்திக் வெங்கட்ராமன், பிரணவ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். இன்று 4-வது சுற்றில் 2-வது ஆட்டம் நடைபெறும்.
- சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை சந்தித்தார்.
கவுகாத்தி:
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை (மராட்டியம்) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஷமீனா ரியாஸ் 11-9, 13-11, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் அஞ்சலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் ஒற்றையர் இறுதிப்போட்டி கடந்த வாரம் நடந்தது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.
நியூயார்க்:
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.
இதில் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்றதால், 6வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 5வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பெலாரசின் சபலென்கா முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்தின் ஸ்வியாடெக் 2வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 3வது இடமும், அமெரிக்காவின் அனிசிமோவா 4வது இடமும் பிடித்துள்ளனர்.
- சமீபத்தில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோகோவிச் கோப்பை வென்றார்.
- இதன்மூலம் ஒரு இடம் முன்னேறி செர்பியாவின் ஜோகோவிச் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.
இதில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து நம்பர்-1 இடத்த்துக்கு மீண்டும் முன்னேறினார்.
இவர் தற்போது நடந்து ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3 லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால் ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி. தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் (10,000 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (4,960 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற செர்பியாவின் ஜோகோவிச் (4,830 புள்ளி) 4வது இடத்துக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் பென் ஷெல்டன் (3,970 புள்ளி) 5வது இடம் பிடித்துள்ளார்.






