என் மலர்
விளையாட்டு
- மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும்.
- முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வரும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதனால் டிரேட் முறையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஏதும் செய்ய தேவையில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பை ஒரு அற்புதமான அணி. அவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தீபக் சாஹர் போன்ற ஒருவரை மாற்றுவது பற்றி அவர்கள் யோசிக்கலாம். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை.
ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரியான் ரிக்கல்டன் என சொல்லி கொண்டே போகலாம். ஒரு அணிக்கு வேறு என்ன தேவை. எனவே அவர்களுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தேவை. அது ஒரு துப்பாக்கி அணியாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும். அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் எடுக்கலாம். ஆனால் முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
என்று பத்ரிநாத் கூறினார்.
- சீனாவின் செங்டு மாகாணத்தில் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
- இந்தியாவின் சுமித் நாகலுக்கு சீனா செல்ல விசா மறுக்கப்பட்டது.
புதுடெல்லி:
சீனாவின் செங்டு மாகாணத்தில் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சுமித் நாகல் விசாவுக்கு அப்ளை செய்தார். ஆனால் அவருக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீனா தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், சுமித் நாகல் எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்டு ஓபனில் அவசியம் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கும் செல்ல முடியும். எனவே தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே விரைந்து உதவி செய்ய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம்.
- கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும் அதன்பிறகு ஒருநாள், டி20 தொடரும் நடக்கவுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம். கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போதைய இந்திய அணியில் அதற்கும் மேல் உள்ளனர்.
ஆசிய கோப்பையில் பும்ராவை முதல் 3 ஓவர்கள் வீச செய்தது நல்ல பலன் தந்ததால், பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
- தான், நலமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் காயத்திலிருந்து இன்னும் மீண்டு வராததால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- முதல் சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-1 என வென்றார்.
- சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
- சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையான வீரர். அவர் பல ஆண்டுகளாக அணிக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இடம் பெற வேண்டும்.
என கூறினார்.
ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- காஷ்மீர் அணி 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மூ காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.
- ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.
இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயஸ் அணி பெறுவதற்கான வர்த்தகத்திற்கு இரு அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.
- அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பா கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்சின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜடேஜா 2012-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசனில் ரூ.18 ேகாடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அணியின் நலனுக்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தோனி துணிந்து விடுவார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முகமது கைப் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்தே தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகிறார்கள். இதில் தோனி சென்னை அணியை விட்டு ஒரு போதும் வெளியேறியதில்லை. சாம்சன், ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனாக இருக்கும். சாம்சன் சி.எஸ்.கே.-வில் இணைந்து தோனி மற்றும் அணி நிர்வாகத்துடனும் எளிதில் பழகி விட்டால் ஒரு வேளை அவரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்து விட்டு பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது.
சி.எஸ்.கே. ஏற்கனவே ஜடேஜாவை கேப்டனாக்கி பார்த்தது. ஆனால் அது தனக்கு சவுகரியமாக இல்லை என கூறி பாதியிலேயே ஜடேஜா ஒதுங்கி விட்டார். இனி, நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரை கொண்டு வருவதையே தோனி விரும்புவார்.
கடந்த முறை சி.எஸ்.கே. அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த தடவை வலிமையாக மீண்டு வந்து மற்றொரு முறை சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய லட்சியமாகும். தொோனிக்கு அணியின் நலன் தான் மிகவும் முக்கியம். எனவே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.
என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார். அவரால் 3, 4, 5 என எந்த பேட்டிங் வரிசைகளிலும் களம் இறங்கி, மிடில் ஓவர்களில் சிக்சர்கள் அடிக்க முடியும். தோனியை போல் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாகவும் செயல்பட முடியும். அது மட்டுமின்றி சாம்சன் தென்இந்தியாவை (கேரளா வீரர்) சேர்ந்தவர் என்பதால் அவருக்கும், சென்னை ரசிகர்களுக்குமான உறவு நன்றாக இருக்கும். அவர் சென்னை அணியின் அடுத்த அடையாளமாக மாறுவார். அதனால் தான் சாம்சனுக்காக சி.எஸ்.கே. இவ்வளவு தீவிரம் காட்டுகிறது. சாம்சன், சி.கே.எஸ்.வுடன் இணைவது உறுதி என்றால், தோனியுடன் அவர் பலமுறை பேசி இருப்பார். திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கும்.
இவ்வாறு கைப் கூறியுள்ளார்.
- 1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
- 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது.
1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது.
இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
- ஜோதி சிங் கேப்டனாக நீடிக்கிறார்.
- மாற்று வீராங்கனைகளாக பிரியங்கா யாதவ், பார்வதி டாப்னோ இடம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
11-வது மகளிர் ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் 2 சிறந்த அணிகள் என மொத்தம் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது ஆட்டத்தில் நமிபியாவையும் (டிச.1), 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியையும் (டிச.3), 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தையும் (டிச.5) சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஜூனியர் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் கேப்டனாக நீடிக்கிறார். மாற்று வீராங்கனைகளாக பிரியங்கா யாதவ், பார்வதி டாப்னோ இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: நிதி, ஹர்ஷா ராணி மின்ஸ், பின்களம்: மனிஷா, லால்தான்லுஅலங்கி, சாக்ஷி சுக்லா, பூஜா சாஹூ, நந்தினி, நடுகளம்: சாக்ஷி ராணா, இஷிகா, சுனெலிதா தோப்போ, ஜோதி சிங், கைடிம் ஷிலீமா சானு, பினிமா தான், முன்களம்: சோனம், பூர்ணிமா யாதவ், கனிகா சிவாச், ஹினா பானோ, சுக்வீர் கவுர்.






