என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4 வீரர்களை கழற்றிவிடும் KKR: ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்க வாய்ப்பு
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.






