என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்- முகமது சிராஜ்
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்- முகமது சிராஜ்

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன்.
    • தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

    கொல்கத்தா:

    இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த தொடர், 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாங்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமன் செய்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். நல்ல பார்மில் இருப்பதால் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன். வலுவான அணிக்கு எதிராக ஆடுவது எனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்' என்றார்.

    Next Story
    ×