என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Squash Match"

    • சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை சந்தித்தார்.

    கவுகாத்தி:

    சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை (மராட்டியம்) சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஷமீனா ரியாஸ் 11-9, 13-11, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் அஞ்சலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    • நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
    • இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.

    சிட்னி:

    நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.

    இதில் முதல் 2 செட்டுகளை ஷகீன் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை ராதிகா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 5-வது செட்டை ஷகீன் கைப்பற்றி வெற்றி பெற்றார். 61 நிமிடங்கள் போராடிய ராதிகா 8-11, 3-11, 11-4, 12-10 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார்.

    சென்னையில் நடந்த ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 இந்தியர்கள் காலிறுதிக்கு தகுதிப்பெற்றனர். #AsianJuniorSquash
    சென்னை:

    25-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

    இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீரர் ருத்விக் ராவ் 11-6, 11-1, 11-3 என்ற செட் கணக்கில் பெஷாந்த் ஸ்ரீ நாகேசை (மலேசியா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு இந்திய வீரர் ராகுல் பாய்தா 7-11, 7-11, 9-11 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் அப்பாஸ் ஸிப்பிடம் தோல்வி அடைந்தார்.

    பெண்கள் பிரிவில் 4 இந்தியர்களில் நவ்மி ‌ஷர்மா தவிர மற்ற 3 பேரும் 2-வது சுற்றுடன் வெளியேறினார். நவ்மி ‌ஷர்மா 11-6, 11-2, 11-6 என்ற நேர் செட்டில் இலங்கையின் கிரா மரி குருகேவை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். #Squash #AsianJuniorSquash
    ×