என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உள்ளூர் போட்டிகளில் விளையாடும் ரோகித் சர்மா
    X

    உள்ளூர் போட்டிகளில் விளையாடும் ரோகித் சர்மா

    • ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.
    • ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர். கடைசியாக அக்டோபர் 2025-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினர்.

    இரண்டு முக்கிய வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர்களுக்குப் போதுமான போட்டி அனுபவம் கிடைக்காது என பிசிசிஐ கருதுகிறது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தனது முடிவை உறுதி செய்துள்ளார். மேலும், நவம்பர் 26-ல் தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நவம்பர் 30-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளதால், சையத் முஷ்டாக் அலி தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    ஆனால், மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி, இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்தவிதமான தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. கோலி கடைசியாக 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×