search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை 10 ஆண்டுகளில் சாதித்துள்ளோம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை 10 ஆண்டுகளில் சாதித்துள்ளோம்

    • 60 ஆண்டுகளில் பல நாடுகள் முற்றிலும் மாறி விட்டன.
    • காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு பற்றி மட்டுமே பேசினார்கள்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மராட்டிய மாநிலம் மாதாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    வளர்ந்த இந்தியாவுக்காக உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறவே வந்துள்ளேன்.உங்களின் அன்பு எனது பலமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எனது வாழ்க்கையை உங்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளேன்.

    மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கும் காங்கிரசின் 60 ஆண்டு காலத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் இப்போது பார்க்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன், மிகப் பெரிய தலைவர் ஒருவர் இங்கு தேர்தலில் போட்டியிட வந்தார்.

    அப்போது அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது அவரை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்ய நாடு வாய்ப்பு அளித்தது.

    இந்த 60 ஆண்டுகளில் பல நாடுகள் முற்றிலும் மாறி விட்டன. ஆனால் காங்கிரசால் விவசாயிகளின் வயல்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை.ஆறு தசாப்தங்களில் அவர்களால் சாதிக்க முடியாததை நாங்கள் ஒரு தசாப்தத்தில் சாதித்துள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு பற்றி மட்டுமே பேசினார்கள், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளேன். நாட்டில் வலுவான அரசாங்கம் இருக்கும்போது, எதிர்காலத்தின் தேவைகளை மனதில் வைத்து நிகழ்காலத்தை கவனித்துக்கொள்கிறது.

    இன்று ரெயில்வே, சாலைகள் மற்றும் விமானப் பாதைகளில் நாம் பெரும் முதலீடுகளைச் செய்கிறோம். எங்களது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒரு ஆண்டு பட்ஜெட், காங்கிரசின் 10 ஆண்டுகளுக்கான உள்கட்டமைப்பு பட்ஜெட்டுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×