என் மலர்

  இந்தியா

  பாஜக அரசைக் கண்டித்து போராட்டம்: டெல்லியில் விஜய் வசந்த்- காங்கிரஸ் தலைவர்கள் கைது
  X

  பாஜக அரசைக் கண்டித்து போராட்டம்: டெல்லியில் விஜய் வசந்த்- காங்கிரஸ் தலைவர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
  • பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று டெல்லியில் போராட்டம் நடந்தது

  நேசனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், செல்ல குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர்.

  இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்னை சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பொய் வழக்குகள் தொடுத்து பழிவாங்க துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல குமார், மாணிக்கம் தாகூர், தேசிய செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்களுடன் கைது செய்யப்பட்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×