search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க-வுக்கு மறைமுகமாக மம்தா  உதவுகிறார் - தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர்
    X

    "பா.ஜ.க-வுக்கு மறைமுகமாக மம்தா உதவுகிறார்" - தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர்

    • பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதே போல பஞ்சாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருக்கிறார். இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களின் ஒருவரான தீபா தாஸ் முன்ஷி கூறியதாவது, "மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு உதவுகிறார் என நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் அவருக்கு மறைமுகமான தொடர்பு இருப்பது எங்களுக்கு தெரியும். அவரது இந்த அறிவிப்பின் மூலம் அது நிரூபணம் ஆகியிருக்கிறது. இதுவரை இந்தியா கூட்டணியில் இருந்த அவர், இப்போது ஏன் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்கிறார். அவர் பா.ஜ.க.வுடன் கை கோர்த்து இருப்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதும் இதன் மூலம் வெளிபடுகிறது" என தெரிவித்தார்.

    Next Story
    ×