search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி விசாரணை
    X

    அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி விசாரணை

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும்.
    • ஆனால் 2 நாட்களுக்கு முன்புதான் அழைப்பு அனுப்பப்பட்டது.

    புதுடெல்லி:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    முன்னதாக இந்த பொது குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும். ஆனால் 2 நாட்களுக்கு முன்புதான் அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் 11-ந்தேதி காலை 9.15 மணிக்கு தொடங்கியது.

    ஆனால் இதை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி காலை 9 மணிக்கு தான் தீர்ப்பு வழங்கினார். எனவே தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். கடந்த 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 28-ந்தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×